வணக்கமுங்க..! தளத்தில் பதிவுசெய்வதற்கென்று எழுதிக்கொண்டிருக்கும் படைப்புகள். 1) சென்னை...
வணக்கமுங்க..!
தளத்தில் பதிவுசெய்வதற்கென்று எழுதிக்கொண்டிருக்கும் படைப்புகள்.
1) சென்னை சென்ட்ரல்- 555 -சிறுகதை
==== சென்னை சென் டரல் ரயில் நிலையத்தில் நண்பகல் 12 மணிக்கு வெடிக்குண்டு வைக்கும் 5 மாணவர்கள், 5 மணி நேர பரபரப்பு, மாலை 5 மணி யில் சென்னை சென்ட்ரலில் நடந்தது என்ன ? நேரத்தின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்கள்.. இந்த 5 மணி நேரத்தில் ஒரு காதல் கதை உட்புகுத்தியிருக்கிறேன்...விறுவிறுப்பான கதையில் கிளுகிளுப்பு வேண்டாமா ?
2) கயல்தேசம் - சிறுகதை/கவிதை
==== நாகப்பட்டினம் கடற்கரையோர மக்களின் வாழக்கைமுறையை எனது பாணியிலிருந்து விலகி வழக்கத்திற்கு மாறான முறையில் முயற்சித்து எழுதப்படும் சிறுகதை/ கவிதை
3) பூனைக்குட்டி -சிறுகதை
==== ஒரு சின்ன பூனைக்குட்டிங்க..இது உங்க கிட்ட பேச வருகிறது. வெயிட் பண்ணுங்க..!
4) தமிழக முதல்வர் குற்றவாளியா ? அத்தியாயம் 2 - சிறுகதை
==== ஏற்கனவே இதே தலைப்பில் டாஸ்மாக் பற்றி விமர்சித்து கதை பதிவு செய்திருந்தேன். இம்முறை முற்றிலும் மாறுப்பட்ட களம்.. மாறுப்பட்ட கோணம், புதிய புகார். ( பதிவு செய்வதற்குள்ள ஆட்சி மாறாம இருந்தா சரி)
5)ஓர் எழுத்தாளனின் கதை - தொடர்கதை.
-==== சில மாதங்களுக்கு முன்பு 14 பாகம் வரை எழுதப்பட்ட கதைதான். அப்போது முடிக்கப்பட்ட விதம் பற்றி தோழர்கள் எழுப்பிய அதிருப்தியால் மீணடும் தொடர்ந்து எழுதப்படும் கதை.
எப்படிங்க எனது சிறுகதைகளுக்கு நான் ஓட்டிய டிரைலர்...!?
நல்லா இருக்கா..! ?
நன்றிங்க
-இரா.சந்தோஷ் குமார்