எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் கவிதைகள் எழுதியது போதும்.! காதலை செய்வோம் ......

காதல் கவிதைகள்
எழுதியது போதும்.!

காதலை செய்வோம் ...
என்று காதல் துணையோடு
நுரைக்க நுரைக்க
காதலித்துக் கொண்டிருந்தேன் .!!

பேச்சு!
சிரிப்பு !!
வெட்கம்!
ஆச்சரியம்!!
மௌனம்!
அழுகை!!

என்று காதல் முடிந்தது...!

தீடிரென்று
மண்டைக்குள் வந்து
மன்மதன் சொன்னான்!

'அழுகைக்கு முன்
ஆனந்தம் சேரடா!'....

"டேய் போடா!
நான் காதல்
செய்ய வேண்டும் !!" என்றேன்.

'நான் போனால்
நீ செய்ய முடியாதடா'
என்றான்.!!!


நாள் : 2-Sep-14, 9:14 am

மேலே