பாம்பாட்டி தேசம்

(Tamil Nool / Book Vimarsanam)

பாம்பாட்டி தேசம்

பாம்பாட்டி தேசம் விமர்சனம். Tamil Books Review
நூல் : பாம்பாட்டி தேசம் ( கவிதை )
ஆசிரியர் : கரிகாலன் Karikalan Karkki
வெளியீடு : சால்ட் பதிப்பகம்
விலை : ₹70

பாம்பாட்டி தேசம் என்பதன் குறியீடு நம் தேசத்தையும் நம் மக்களை தான் குறிப்பிடப்படுகிறது. சமூகத்தில் ஏற்படும் அவலங்களை சாடி கவிதை புனைந்துள்ளார். அவர் வசிக்கும் நகரை சாடியும் மக்களின் வாழ்வை எடுத்துரைத்தும் உள்ளார். கரிகாலன் அவர்களின் தனி தன்மை ஒவ்வொரு கவிதையிலும் மிளிர்கின்றன. இவருடைய சமூக உணர்வும் சிந்தனையும் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகின்றன. சிறிய அளவிலான கவிதைகளை விட பெரிய வரிகள் நம்மை ஆட்கொள்கிறது. எதிர் அழகியல் இவரின் கவிதைகளில் நர்த்தனமாடுகின்றது. தற்கால இந்நாட்டின் அவல நிலையையும் அரசியலை பெரும்பாலான கவிதை நம் முன் வைக்கின்றன.

புதிய தலைமுறை கடவுள்
கருணை
பாம்பாட்டி தேசம்
இழப்பு
எரிந்து பார்ப்பது
வீடு திரும்பும் மகளின் பாதை
உறைந்த கணம்
நான் ஈ
புனித நகரம்
துளி
முகம்
ஒரு மண்புழுவின் சரிதம்
பொருந்தாமை
இந்திரா நகரத்துவாசிகள் போன்ற கவிதைகள் மிகவும் சிறப்பானவை.
மீதமுள்ள எல்லா கவிதைகளும் பிடித்திருந்தது.

” நான் ஈ ஆனாலும் இரும்படிக்கிற இடத்தில் தான் எனக்கு வேலை ! ”

“மறுநாள் காலை அலுவலகத்தில் ஒப்பமிடும் போது தான் ஞாபகத்துக்கு வரும் அதற்கு ஒரு பெயர் இருப்பது ”

“மகள் வீடு திரும்பும் வாகனத்தை கடவுள் தான் இயக்குகிறாரென்பது !”

மக்களின் முதல்வர் என்ற சொல்லாடல்….

இவையெல்லாம் செம்ம !

கவிதைகளில் எப்படி தான் இப்படி இக்கால ட்ரெண்ட்களை தெரிந்து வைத்து எழுதியுள்ளாரோ தெரியல ?!

இக்கவிதை நூலை பற்றி கூறும் பொழுது அட்டையை பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பார்த்த கவிதை புத்தகங்கள் அனைத்தையும் விட மிக அருமையாக இருந்தது. உள்ளேயிருக்கும் சிகப்பு காகிதம், கரிகாலன் அண்ணானின் படமும் அருமை !

முதலில் மேம்போக்காக படித்த போது எனக்கு பிடிக்கவில்லை. பிறகு தான் முழுவதும் படித்தேன். மனதில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீங்களும் என்னை போல் மேம்போக்காக பார்த்துவிட்டு தப்பாக கருதாதீர்… பொறுமையாக நிதானமாக படியுங்கள்… படிக்க தவறவிடாதீர்கள் !

கரிகாலன் அவர்களின் எட்டாவது கவிதை நூல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது அவருடைய ஒன்பதாவது கவிதை நூல் என்று தான் நினைக்கிறேன். மகளை பற்றி மட்டுமே கவிதைகள் எழுதும் கரிகாலன் அண்ணாவிற்கு வேண்டுகோள். இனி மகனை பற்றியும் எழுதவும். (நானும் மகன் தானே ! )

என்றென்றும் கரிகாலன் அண்ணனின் எழுத்து காலத்திற்கேற்ப உருமாறிய கொண்டே இருக்கும் என்பதும், இளமையுடன் இருக்கும் என்பதும் நிதர்சனம் !

சேர்த்தவர் : கோகதினேஷ்
நாள் : 13-Nov-15, 9:22 pm

பாம்பாட்டி தேசம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே