உயிர் கொண்ட ரோஜாவே
(Tamil Nool / Book Vimarsanam)
உயிர் கொண்ட ரோஜாவே விமர்சனம். Tamil Books Review
கதாநாயகன் - நிரஞ்சன்
தாய் தந்தை அற்றவன். உழைப்பால் முன்னேறிக் கொண்டிருக்கும் சாமான்யன். அன்பான காதலன். பாசமான கணவன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த ஒரு தந்தை. இந்த இயல்புகளே இந்த நாவலை வாசிக்கும் பெண்களுக்கு நிரஞ்சன் மீது காதலை தோற்றுவிக்கும்.
கதாநாயகி - வெண்ணிலா
தாய் தந்தை அற்றவள் தான். ஆனாலும் பெற்றோருக்கும் மேலாக பாசத்தை பொழியும் அன்பான அண்ணனைப் பெற்ற அதிஷ்டசாலி. அண்ணன் மீதான பாசத்தில் அண்ணனையே மிஞ்சியவள். உயிருக்கு உயிராக தன காதல் கணவனை நேசிப்பவள்.
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நம் நாயகன் , நாயகியிடையேயான ஊடல்களையும் , ஊடல் தீர்ந்த பின்னான கூடல்களையும் வாசகர்கள் ரசிக்கும் வண்ணம் தந்துள்ளார் நாவலாசிரியர்.