தஞ்சை அரசூரிலிருந்து நண்பர் விச்சுவின் ஹைக்கூ விமர்சனக் கடிதம்

(Tamil Nool / Book Vimarsanam)


தஞ்சை அரசூரிலிருந்து நண்பர் விச்சுவின் ஹைக்கூ விமர்சனக் கடிதம் விமர்சனம். Tamil Books Review
ஹைக்கூ விமர்சனம்.

தஞ்சை அரசூரியிலிருந்து நண்பர் விச்சுவின் அன்பு கடிதம்.

ந.விச்வநாதன். அரசூர், அம்மன்பேட்டை,
தஞ்சாவூர் – 613 205.
தேதி : 12- 02- 2012.


அன்பு நண்பருக்கு நலமே விளைக. வணக்கம்

தாங்கள் அன்புடன் அனுப்பிய “ சொல் கொண்ட மேகங்கள் ” நூல் பெற்றேன். நன்றி. சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள். எல்லா கட்டுரைகளையும் வாசித்து முடித்த பிறகு மனதுக்கு திருப்தியாக இருந்தது.
தற்காலத்தில் ஹைக்கூ என்ற பெயரில் ஏராளமாய் சத்தற்ற விஷயங்களாக வந்து கொண்டிருக்கின்றன. ஹைக்கூ பற்றிய புரிதல் மிகக் குறைவாகவே இருக்கிறது. அசல் ஹைக்கூவிற்கு அருகில் கூட வரத்தக்கவையாய் இல்லை. ஆரவாரம் மிகவாகவே இருக்கிறது.

சொல் கொண்ட மேகங்கள் வழி நீங்கள் உண்மையான அக்கரையோடு ஹைக்கூ தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர முடிந்தது. ‘ எந்த முடிவும் எட்டாமல் / முற்றுப் பெற்றது / மூவருக்குள் நடந்த விவாதம் ‘ என்பது அருமைதான். இதுதான் சரியான பார்வை.

ஹைக்கூ குறித்த உங்கள் பார்வை தெளிவாகவே இருக்கிறது. ஜென் குறித்த உங்கள் அனுபவங்கள் மிகச் சிறப்பானவை. ஜென் புரிதல் என்பது ஹைக்கூவைப் புரிந்து கொள்ளல்தான். கீழைநாடுகளின் கலாச்சாரத்தன்மையும் தமிழகச் சூழலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பருவகாலங்கள் வாழ்வியல் நெறிகளும் கூடத்தான். ஆயினும் பலருக்கு ஹை்கூ சித்திப்பதில்லை. உங்களுக்கு அது வந்திருக்கிறது. என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் நிறைய எழுதுங்கள். உங்களால் முடியும்.

அன்பாதவனின் பார்வை வித்தியாசமானது. சிறுவர்களுக்கான இலக்கியமே அருகிப் போன காலத்தில் அதில் நீங்கள் முனைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

நான் ஒரு சரியான கிராமத்தில் வசிக்கிறேன். புத்தகம் தேடிப் போக நீண்ட பயணம் தேவைப்படுகிறது. எனவே கிடைக்கும் புத்தகங்களிலேயே என் கவனம் செல்கிறது. புதிய வரவுகள் எனக்கு தாமதமாகவே தெரிகின்றன. தொடர்ந்து வாசிக்க முடியாதச் சூழல். நிறைய ஹைக்கூ நூல்கள் நான் வாசிக்கவில்லை. இப்போது விரிவான ஒரு கட்டுரை ஜென் குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எனவே புத்தகங்களைத் தேடிப் போக வேண்டிய அவசியம். என் முள்ளில் அமரும் பனித்துளிகள் குறித்த பார்வை நன்றாகவே இருக்கிறது. நன்றி.
மீண்டும் வருவேன்.

நட்புடன்

நா.விச்வநாதன். posted on 01-11-2016.
*


நூல் ஆசிரியர்சேர்த்தவர் : துறைவன் 1-Nov-16, 8:40 am
(0)
Close (X)


தஞ்சை அரசூரிலிருந்து நண்பர் விச்சுவின் ஹைக்கூ விமர்சனக் கடிதம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.comமேலே