நெருப்பு நிலா

(Tamil Nool / Book Vimarsanam)

நெருப்பு நிலா விமர்சனம். Tamil Books Review
நெருப்பு நிலா - கேப்டன் யாசீன்

இந்நூலில் கவிஞர் யாசீன் அவர்கள்
காதலுக்கும் இலட்சியத்திற்குமான
போராட்டத்தை நாவலாக
அதுவும் கவிதை நடையில் மிக அழகாக
நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்...

உங்க கால பழைய
கதைகளை மட்டுமே
இலக்கிய நடையில் படித்துள்ள நமக்கு
ஒரு புதிய கதைக்கருவை மையமாக வைத்து நடைமுறையில் உள்ள
வார்த்தைகளை கொண்டு மிக அழகான நாவலை தந்திருக்கிறார்...

கதையின் நாயகியின்
மென்மையாகட்டும்.. கதாநாயகனின் காதலாகட்டும் அவனது லட்சியமாகட்டும் அனைத்தும்
கவிதையாக சொல்லுவதில் இங்கு கவிஞரின் கற்பனை திறனை வியக்க வைக்கிறது..

வார்த்தைகளுடன் விளையாடி இருக்கிறார்...

இந்த புதிய முயற்சியை
அதுவும் முதல் முயற்சியில் தரும் தைரியம் கவிஞர் யாசின் அவர்களது
தாகத்தையும் கவித்திறனையும் காட்டுகிறது...

இந்நூலை படித்ததும் கவிஞரின் வரிகள் மனதை மயக்கி சில கணங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது...

இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறார்...

'இயற்கையை ரசித்தால்
அது முதலிரவு போல் சுகமானது:...

பெய்ததென்னமோ பனிமழைதான்..
ஆனால் அவன்
எரிமலையில் நனைந்து கொண்டிருந்தான்...

இந்த தொண்டை எப்போது பாலைவனமானது???

காதல் ஓரு புயல்
அந்த போராட்டத்தில்
இந்த பூ
என்ன செய்ய முடியும்???

பெண்
பிரபஞ்சத்தின்
முதலும் முடிவுமானவள்..

சாக்கடை சமுகத்தை
சலவை செய்யும் நிலையமாவேன்...

இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்...
முதல் பதிப்பிலேயே கவிஞர் முத்திரை பதித்துவிட்டார்....

இன்னும் நிறைய நிறைய பதிப்புகளை பதிந்து சிகரத்தை விரைவில் தொடுவார்...

தமிழன்னையின் தவப்புதல்வன்
கேப்டன் யாசீன் அவர்கள் இந்த கவிப்பயணம் முன்னணி கவிஞர்கள் வரிசையில் முதலாவதாக வருவார் என்பதில் ஐயமில்லை....

பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள இங்கு கடமைப்பட்டுள்ளேன்....

அன்புடன்...
சி.ஆர.கே...
**********

நன்றி கவிஞரே.

நெருப்பு நிலா நூல் பெற
கேப்டன் யாசீன்
9500699024
9942052069

சேர்த்தவர் : கேப்டன் யாசீன்
நாள் : 26-Jul-18, 3:35 pm

நெருப்பு நிலா தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே