பார்த்திபன் கனவு

(Tamil Nool / Book Vimarsanam)

பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு விமர்சனம். Tamil Books Review
கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக இடம் வகித்த புகழ் பெற்ற வரலாற்றுப் புதினம்.
பின்னாட்களில் நூலாக வெளிவந்தது. இது ஒரு சரித்திரக் கதை.
பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவர் மகன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பதை அழகாக இந்நூலில் காட்டப்பட்டுள்ளது.
நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் உயிரோட்டமாக வருகின்றனர்.

முதலாம் நரசிம்ம பல்லவன்,சிறுத்தொண்டர் - நரசிம்மரின் சேனாதிபதி,இரண்டாம் புலிகேசி - சாளுக்கிய மன்னன்,சுவான்சாங் - சீன பயணி போன்றோர் உண்மைச் சரித்திரப் பாத்திரங்களாக இடம்பெற்றுள்ளனர்.

இந்நூலை படிப்பவர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை படித்தப்பின் இந்நூலை வாசித்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
ஏனெனில் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 28-Mar-14, 4:58 pm

பார்த்திபன் கனவு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே