ராஜ திலகம்

(Tamil Nool / Book Vimarsanam)

ராஜ திலகம்

ராஜ திலகம் விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்டது நூல், ராஜ திலகம்.

காஞ்சி கைலாச நாதர் கோவில் மற்றும் மாமல்லபுரத்துக் கடற்கரை அரங்கன் கோவில் இவ்விரண்டின் நிர்மாணத்தை பற்றியது. இவ்விரண்டு கோவில்களில் பொதிந்து கிடக்கும் சிற்பச் செல்வத்தை நிர்மாணித்த ராஜசிம்ம பல்லவன் என்ற ராஜ சிற்பியை பற்றியது. அவனது ராணிகளான ரங்கபதாகாதேவியையும், மைவிழிச் செல்வியையும் பற்றியது. கலையும் காதலும் பரவி நிற்கும் அற்புத காவியம் இந்நூல்.

சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன், தன் தந்தை புலிகேசியை கொன்று வாதாபியை அழித்த பல்லவர்களை பழி தீர்க்க வரும் சமயம், விக்கிரமாதித்தனை ராஜசிம்ம பல்லவன் எவ்வாறு முறியடித்து ராஜ திலகம் பெறுகிறான் என்பதே இந்நூலின் கதை.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 29-May-14, 3:17 pm

ராஜ திலகம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே