சித்திரை திருநாள்

ஆதவன் அனலாய் அவதரிக்க
தீமைகள் எரிந்து,
நன்மைகளை மேலும் செம்மையாக்கும்
திருநாள்.
உழைப்பால் உயரும் தமிழரின்
வாழ்வெல்லாம் வசந்த காலமாய்
ஒளிர வைக்கும்
இன்பத் திருநாள்.
நாணல் என நிலம் நோக்கும்
வெட்கத்தில் கீழ்வானம் தோற்க்கும்
தமிழ்ப் பெண்ணின்,
புன்னகைப் போல்
மத்தாப்புப் பூக்கும் சித்திரைத் திருநாள்.
வள்ளுவனின் வாக்காய்
சோழரின் வம்சமாய் வாழ்ந்திருக்கும்,
திரைக் கடல் ஓடி திரவியம் தேடும்
தமிழருக்கும்,
தாய்மண்ணை தங்கமாய் மாற்றி கொண்டிருக்கும்
மறத்தமிழருக்கும்
என் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.