இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...!!
மனிதன் தோன்றிய காலம் இருந்தே
ஆணுக்கு பெண் அடிமை,
என்ற ஆதிக்கத்தை காதல் வென்றது
ஆண் பெண்ணுக்கு அடிமையான போது..!!
உருகி உருகி காதல் வளர்ப்பதும்
பெண் தான்,
முழுவதும் காதலில் உருகி விட்டால்
நீ யாரென்று கேட்டு ஓடுவதும்
பெண் தான்..!!
தனக்கென காத்திருக்க சொல்வாள்,
நேரம் தவறி அவள் வந்து,
காத்திருந்தவனை முட்டாள் என்பாள்..!!
சிரிப்பது பிடிக்கும் என்பாள்,
துக்கம் மறைத்து அவளை
சிரிக்க வைத்தால் கோமாளி என்பாள்..!!
அதிக அக்கறை வேண்டும் என்பாள்,
அக்கறையுடன் ஆண் நடந்தால்
அதிகாரம் செய்யாதே என்பாள்..!!
தன்னைப்பற்றிய உண்மை கேட்பாள்,
உண்மையை ஆண் சொன்னால்
வேறு ஆளை பார் என்பாள்..!!
நாள் முழுக்க தன்னுடன் இருக்க சொல்வாள்,
அந்த நாளின் இறுதியில்,
உனக்கு வேறு வேலை இல்லையா என்பாள்..!!
கஷ்டங்களில் ஆறுதல் சொல்ல சொல்வாள்,
ஆண் கஷ்டப்பட்டு ஆறுதல் சொன்னால்
அதிகம் பேசாதே என்பாள்..!!
ஆண்கள் அழுதால் பிடிக்காது என்பாள்,
அவளுக்காக மட்டும் ஆண் அழுதால்
நல்லவன் என்பாள்..!!
அவள் செய்யும் அநியாயங்களை நியாயம் என
ஆண்களை சொல்ல வைப்பதிலே
அவள் வென்று விடுகிறாள்..!!!
பெண்கள் ஒரு புள்ளி வைக்கும் போது
அதை கோலமாக மாற்ற ஆண் முயன்றால்
அலங்கோலமாக்கி விடுவதே பெண்கள் தான்..!!
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
