பாவைக்கூத்து....!!!!

உயிரில்லா பொம்மைகள்,
அதற்கு தோலில் ஆடைகள்,
உடலில் வண்ண ஓவியங்கள்,
யாரோ ஒருவன் கை ஆட்டுவிக்க
உணர்வுள்ள படைப்புகளாகி
பாவைகள் கூத்தாடுகிறது..!!
திரையின் மறைவில்,
விளக்கின் ஒளியில்,
ஒப்பற்ற கலைஞனுக்கு சவால் விட்டு
பாவைகள் தங்களின் கூத்தை தொடரும்..!!
அழகிய பெண் பொம்மைகளே
பாவை என்றாகிறது..!!
பெண் என்பதாலோ என்னவோ
சிறு அசைவுகளும்
நளினமேற்று நடனிக்கிறது..!!
அத்தனை பாவனைகளும்
எங்கே மறைத்திருக்குமோ தெரியாது..?
அழுகைக்கும் சிரிப்புக்கும்
வித்தியாசம் காட்டி
உயிருள்ளவர்களை கட்டி போடும்
இந்த உயிரில்லா பாவைகள்..!!
இப் பாவைகள் போலவே
எல்லாமறிந்ததாய் நினைக்கும் மனிதர்களும்,
ஆட்டுவிக்க ஆள் யாரும்
இல்லாத போதே
நேரத்திற்கு நேரம் குணங்களை மாற்றி
பொம்மைகள் தோற்றுவிடும் அளவிற்கு
யாருக்காகவோ நடித்துகொண்டிருக்கிறான்..!!