பிரித்து ஆள்
வேண்டியது கிடைத்த உடன் 
 வேண்டாத நினைப்பு வந்தது 
வேண்டியவருக்கு ஒன்று
 வேண்டாதவருக்கு இன்னொன்று  
என்று பாகுபடுத்தி 
ஒளித்து மறைத்துக்  கொடுத்து
தெரியாமல் பங்களித்து 
பகையை வளர்த்து 
வெறுப்பை வரவாக்கி 
வெகுண்டு எழச்  செய்து 
கெடுத்து குட்டிச் சுவராக்கி
ஒன்று சேர விடாமல் நாசமாக்கி
 குழப்பத்தை   ஏற்படுத்தி 
 கலக்கம் உண்டாக்கி
கலாட்டா பண்ணினான்
   பெருந்  தலைவன் 
பிரித்து ஆள்  என்ற கூற்றுக்கு 
வழி அமைக்க ஏதுவாக
 
                    
