தாயின் கண்ணீரும் குமுறலும்
பாலூட்டி சோறூட்டி
தாலாட்டி சீராட்டி
என் செல்லத்தை வளர்த்தேனடா
இழவுக்குப் போய் திரும்ப
இழவடா எம் இல்லத்து
மானத்தைப் பறித்த கயவனே
உயிரையும் அல்லவா பறித்திட்டாயடா
உன் காம பசிக்கு
என் செல்லமடா கிடைத்தா
என் செல்லக் கிளியின் அழுகைக் கேட்டிலையோ
உன் தங்கை நினைவில்லையோ
உன் தாயார் நினைவில்லையோ
என் செல்லத்துக்கு
உயிருள்ளது அன்புள்ளது
உனக்கு அது நினைவில்லையோ
காமத்தை அடக்கியாளத் தெரியாத மூடனே