மனித நேயம்

மாற்றம் வேண்டும் வாழ்வினில்
ஆனால் அது மழலை உள்ளமும்
மனதை வருடும் பாசமும்
கொஞ்சி விளையாடும் வஞ்சமற்ற அன்பும்
மாற்றம் இல்லா ஒன்றாக வேண்டும்
மனிதன் வாழும் இடமெல்லாம்
மாற்றம் ஓன்று தேவை அது
பருவங்கள் தோற்றங்கள் கோலங்கள் எதிலும் ஆகலாம்
ஆனால் உள்ளம் மட்டும் மாறாமல்
கள்ளமற்ற வெள்ளை உள்ளம் ஆக
மனிதனை நேசிக்கும் மனிதனாக
நேசம் மட்டுமே நெஞ்சங்களாக
வாழ்ந்து இருந்தால்
மனித நேயம் எனும் மாசில்லா கோட்டையை
எந்த மாற்றமும் தகர்த்திட முடியாது

எழுதியவர் : பாத்திமா மலர் (5-Feb-15, 3:15 pm)
Tanglish : manitha neyam
பார்வை : 906

மேலே