ஒரு பெண்ணின் புலம்பல்
நகை நட்டு
அணிந்து சென்றால்
நடக்குது கொள்ளையென்று
கழற்றி வைத்துவிட்டுக்
கல்லூரி சென்றேன் !
வீட்டை விட்டு
வெளியே வந்தால்
சுற்றித் திரியும்
சொறிநாய்கள் கூட்டம்!
விலகி விரட்டி
வீதியில் நடந்தால்
வேடிக்கைப் பார்க்கும்
வெறிநாய்கள் தொல்லை!
அங்கம் மறைத்து
அடியெடுத்து வைத்தால்
அங்கும் நுழையும்
காமக் கண்கள் !
மோகவெறிபிடித்த
மிருகங்களிடமிருந்து
கற்பைக் காப்பது
எப்படி என்று
எண்ணிக்கொண்டே...
இல்லம் வந்தேன்!
கொள்ளை போயிருந்தது
அத்தனை செல்வமும் !
என்ன செய்வதென்றே
தெரியவில்லை?