வேலைத் தேடும் பட்டதாரிகளே ……

கஷ்டப்பட்டு வாங்கியப் பட்டத்திற்காக
இஷ்டப்பட்ட வேலையைத் தேடி அலைகிறான்
எத்தனை இன்னல்கள், இடையூறுகள்
வந்தாலும் துவளாமல் அலையும்
என் பட்டதாரிகளே……!

தன்னைப் படிக்க வைத்த
தாய் தந்தைக்கு ஒரு
வாய் கஞ்சியாவது ஊற்றுவதற்காக
இந்தப் போராட்டத்தை நடத்தும்
என் இளைஞனே ……!

கடலில் சென்று மீன்பிடிக்கும்
மீனவர்களைப் போல
விடாமுயற்சி என்னும் வலையை வீசி
வேலை என்னும் மீனைப்பிடிக்க போராடும்
என் பட்டதாரிகளே……!

வண்டி இழுக்கும் கூலித்தொழிலாளிப் போல்
ஒவ்வொரு வேலைத்தேடி அலையும்
இளைஞர்களும் தன் குடும்பப்பாரத்தை
சுமந்து சென்று தன்னம்பிக்கையுடன் வாழும்
என் இளைஞனே ……!

துவண்டு விடாதே என் இளைஞனே
சோதனைகளை எல்லாம் சாதனையாக்கும்
காலம் வந்து சேரும் – அதுவரை
பொறுமையோடு போராடு
வெற்றி நிச்சயம் கிட்டும் ஒரு நாள் ……!

எழுதியவர் : ராஜா (5-Feb-15, 2:47 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 76

மேலே