டப்பிமா பா ……
அன்புள்ள அப்பா ……
எனக்கு ஜீபூம்பா பொம்மை வேண்டாம்
ஜீபூம்பா கதைச் சொல்லும் அப்பா வேணும்
எனக்கு தனியாக ஓட்டிச்செல்லும் மிதிவண்டி வேண்டாம்
என் கைப்பிடித்து நடக்கும் அப்பா வேணும்
எனக்கு புதிய புதிய ஆடைகள் வேண்டாம்
என் புதிய புதிய கற்பனைகளைக் கேட்கும் அப்பா வேணும்
எனக்கு குளு குளு அறைகள் வேண்டாம்
என் தலையில் எண்ணை ஊற்றி குளிப்பாட்டும் அப்பா வேணும்
எனக்கு ஊர் ஊராக சுற்றிப்பார்க்க வேண்டாம்
என் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் அப்பா வேணும்
எனக்கு கலர் கலரா மிட்டாய் வேண்டாம்
என் வரைப்படத்திற்கு கலர் கொடுக்கும் அப்பா வேணும்
எனக்கு தொலைப்பேசியில் முத்தம் வேண்டாம்
என் கண்ணத்தில் மீசைக் குத்தும் அப்பா வேணும்
நீ வருவாய் என்று தினமும் வானத்தையேய் பார்க்கும்
உன் டப்பிமா பா ……!