ஆதலால் காதல் செய்வீர் …………… மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி

42 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டியில்
அழகான பூனை எலி சண்டையைப் பார்த்து
அளவற்ற சிரிப்புடன் உட்கார்ந்தேன்
அதிகமாக பஞ்சு நிரப்பிய இருக்கையில்

சுத்தமான காற்றுக்கு ஜூரம் பிடித்துக்கொண்டதோ என்னவோ
சுற்றி சுற்றி வந்து என்னை அணைத்துக்கொண்டது
சுவரால் மட்டும் கட்டப்பட்ட எங்கள் வீட்டை
சுமந்து கொண்டிருப்பது 72 வீடுகள் (எட்டிப் பார்க்கவே பயமாக இருக்கும்)

கணக்குப் போடத் தெரியாத வயதில்
கணிப்பொறி வாங்கி தந்த தந்தையே
தானாக சிறுநீர் வரும் வயதில்
தனியறையில் தவிக்கவிட்டுவிட்டாயே

தினமும் ஆசை கொள்ளும் என் உதடுகள்
அம்மாவின் கைகள் படாதா என்று
தினமும் ஆசை கொள்ளும் என் தோள்கள்
அப்பாவின் கைகள் படாதா என்று

உயிரற்ற பொம்மைகளோடு வாழ்வதைவிட
உணர்ச்சியற்ற மனிதர்களோடு வாழும் போது மட்டும்
உருட்டி உருட்டி முழிக்கும் என் கண்களும் நனைகிறதே
உங்கள் பிள்ளைகளை ஆதலால் காதல் செய்வீர் …………………!

எழுதியவர் : ராஜா (5-Feb-15, 2:30 pm)
பார்வை : 83

மேலே