அகம்

நொந்து கிடக்கும்
மனதில்
நொறுங்கிப் போனது
உயிர்.

சுவடுகள் இன்றி
தொலைந்த கனவுகள்
விசாரிக்கப் படுகின்றது .......

துக்கத்தால் நிரம்பியது
உடைந்து போன
இதயம்.

என் கண்களின்
ஆழம் பாருங்கள்
காயங்களின்
வலிகள் சொல்லும்.

ஒரு தற்காலிக
மகிழ்ச்சி வேண்டி
உங்கள் முன் நான்,
"பைத்தியம்" என்று
வேடிக்கை பார்க்கிறீர்கள்.

தயவு செய்து
யாராவது
நம்பிக்கை தாருங்கள்
நாளைய தினம்
பிரகாசிக்கும் என்று.

நம்புங்கள்
நான் பைத்தியம் இல்லை.

எழுதியவர் : selvanesan (5-Feb-15, 3:20 pm)
Tanglish : agam
பார்வை : 223

மேலே