அப்பா அம்மா கட்டுரை

அப்பா என்றால் குடும்பத்தில்
தலைவன் மட்டுமல்ல
சகலமும் அவனே
என்று வாழும் குடும்பங்கள்
இன்றும் இல்லாமல் இல்லை
காலம் கலியுகமாக
முறைதலைகளும் மாறுகிறது

இன்றைய பிள்ளைகள் பெண்ணோ ஆணோ
படித்து விட்டால் எல்லா விபரமும்
அறிந்து தெளிந்தவர்கள் ஆகிறார்கள்
உறவுகளை சில பிள்ளைகள்
உதாசீனப் படுத்துகிறார்கள்
எல்லோரும் அல்ல படித்த பிள்ளைகள் அநேகர்
தாய் தந்தையை கவனித்துக் கொள்ள தவறுவதில்லை
அவர்கள் என்றும் மதிப்பு மரியாதை
கொடுக்க தவறுவதில்லை

போனால் வராத உறவு தாய் தந்தை
ஒருவர் ஒருமுறை தான்
மகனாகவோ மகளாகவோ பிறந்திட முடியும்
அத்தகைய சொந்தம் தருவது
நம் அன்னையும் தந்தையுமே
கோடி கொடுத்தாலும் அந்த உறவு திரும்பாது
அவர்களை மதிக்க தவறிய நேரங்களை
நினைத்துப் பார்த்தால் நம்மை
பெற்ற பயன் அற்றுப் போய் விடுகிறது அவர்களுக்கு

இரவு பகல் பாராது ஓடி ஓடி உழைக்கும் அப்பா
உறக்கத்தையே மறந்து நம் நினைவில்
அக்கறையோடு அன்புடனும் பாசத்துடனும்
எந்தக் குறையும் இன்றி
வாழ வழி காட்டும் அம்மா
மறக்க முடியுமா மறுக்க முடியுமா
உறவைப் பிரித்துப் பார்க்க முடியுமா
அவர்களைக் கண் கலங்க விடாதீர்கள்

பெற்றெடுத்த உள்ளங்கள் எப்போதும் தெய்வங்களே
யாரும் நம்மை வேதனைப் படுத்தி விட்டால்
தாங்க மாட்டாமல் துடித்துப் போய் விடுவார்கள்
துவண்டு விடுவார்கள்
வரிந்து கட்டிக் கொண்டு போருக்கு கிளம்பி விடுவார்கள்
அதுதான் அப்பா அம்மா
பொத்திப் பாதுகாப்போம் இந்த உறவை
பொன்னுலகம் காண்போம் இவ்வுலகிலே
பூவான அவர்கள் மனமும் முகமும்
என்றென்றும் மலர்ந்திட செய்வோம்

எழுதியவர் : பாத்திமா மலர் (21-Jun-15, 10:24 pm)
Tanglish : appa amma
பார்வை : 2844

மேலே