என் கண்மணிப் பூவே

மழலைப்பாதத்தில் எனை மிதித்து,
நெஞ்சில் குட்டி பூகம்பம் தருபவளே,
நிலவு நாளை வந்துவிடும்,
கரையாமல் நீ தூங்கு.....கண்மணியே !

நான் கழற்றிய சட்டைக்குள்,
செல்லமாய் நீ புகுந்து,
என் பாவனை புரிபவளே,
நிலவு நாளை வந்துவிடும்,
கரையாமல் நீ தூங்கு.....கண்மணியே !

அம்மா தரும் வழியில்லா அடிக்கும்,
பொய்க்கண்ணீரை பொய்கையாய்ப் பொழிபவளே,
நிலவு நாளை வந்துவிடும்,
கரையாமல் நீ தூங்கு.....கண்மணியே !

அழ்த்தூக்கத்தில் உன்னை மறந்தும்,
அன்னை முந்தானையை உடும்பாய் பற்றுபவளே,
நிலவு நாளை வந்துவிடும்,
கரையாமல் நீ தூங்கு.....கண்மணியே !

கூட்டத்தில் நான் விளையாட்டாய் ஒளிந்து கொள்ள ,
உன் கண்மணிகள் கண்ணீரில் மச்சமாய் நீந்திட,
உன் பிஞ்சுஇதயத்தின் துடிப்பைப்பார்க்கையில்,
என் அன்னை கண்முன் தெரிகிறாள்...உன்னுருவத்தில்!!

நிலவு நாளை வந்துவிடும்,
கரையாமல் நீ தூங்கு.....கண்மணியே !

எழுதியவர் : பாரதி பறவை (30-Sep-16, 2:06 pm)
பார்வை : 190

மேலே