உன் இயக்கத்தில்

உன் இயக்கத்தில்!
மலர்கள் ஒளி பரப்ப,
வண்டுகள் ஒலி பரப்ப,
படம் பிடித்தது தென்றல்,
நான் பூ பறித்த காட்சியை!
நன்கு முகர்ந்து பார்,
இந்த பூவின் வாசனையில்,
பதிந்திருக்கும் குறும்படமாய்,
உன் இயக்கத்தில்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (28-Apr-17, 12:06 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : un eykkathil
பார்வை : 71

மேலே