காதல்

காதல்!
அன்று ...
போஸ்ட்டல் தந்தியைப்போல்,
நோக்கியோ செல் போன் போல்,
பாண்டி பஜார் நடைபாதைக் கடை போல்
நம் காதல் நிலைக்கும் என்றோம்!
இன்று...
மூன்றுமே மறைந்து விட்டது, நம் காதலைப்போல்!
குப்பையில் கிடக்கும் காலாவதியான மருந்து மாத்திரை போல்,
நினைவுகள் மட்டும் நெஞ்சில்! ,

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (23-May-17, 11:48 pm)
Tanglish : kaadhal
பார்வை : 122

மேலே