இதயம் என்னும் கூட்டுக்குள் 555

உயிரே.....

உனக்கு இன்று திருமணம்...

எனக்கு முதல் மரணம்...

நீ உன் கணவனோடு நடைபோட்டு
செல்கிறாய்...

நான் உன் நினைவுகளோடு
செல்கிறேன் நடைபிணமாக...

உன் முகத்தில் புன்னகை...

என் முகத்தில் தாடி...

நாளை உன் மழலை சிரிக்கும் போது
என்னை நினைக்காதே...

நீ பலமுறை என்னிடம்
சொல்லி இருகிறாய்...

என் சிரிப்பு ஒரு மழலையின்
சிரிப்பு என்று...

உன் கணவரை நினைத்துகொள்...

உன் வாழ்க்கையில்
என்னை நினைக்காதே என்றும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-May-12, 3:59 pm)
பார்வை : 472

மேலே