எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா? 
@@@@@@@@@@@@@@@@@@@@ 
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்     விளக்குகிறார்: 

“இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர்களாவது, கள்ளர் 

வகுப்பினர் முதலானோர்பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயருகளாவது சங்கநாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் 

இடைக் காலத்துத் தோன்றியவையே. 

ஐயர் எனபது முனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது.கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறுகுலத்துப் 

பெரியார்களையும் சிறப்புப்பற்றி ஐயர் என ஆன்றோர் வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும், 

சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் 


என்ற விதிப்படி, அமரமுனிவன் அகத்தியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றாற்போல இயற்பெயர்க்கு 

முன் வருதலே மரபு. பிற்காலத்திற்றான் பெயர்கள் இம்முறைமாறி வரலாயின. சிறப்புப்பெயரும் முன்பு யாவர்க்கும் வழங்குவன 

அல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் விரும்பவில்லையென்பது போதரும்” 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
(நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்- 18, தமிழ்மண், சென்னை, பக்கம் 43, 44.) 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
நன்றி: முகநூலில் - தமிழ நம்பி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சீரிளமை குன்றாஎம்மொழி செம்மொழிஉலகின் முதன் மொழி

மேலும்

தொடருங்கள் தோழமையே ,வாழ்த்துக்கள் 12-Jan-2017 12:12 pm
நன்றி கவிஞரே. இந்த அறிஞரை நான். பள்ளிப் பருவத்திலேயே கேள் வி ப் பட் டி ரு க் கி றே ன். க ல்லூரியில் இவரது கட்டு ரைய மொழிப் பாடத்தில் படித்திருக்கிறேன். படிப்பை முடித்து பணியி ல் சேர்ந் த பின்பு க ள் ள க் கு றி ச் சி யி ல் இரு க் கு எ ன் அக் கா வீ ட் டு க் கு செ ன் று சில நா ட் க ள். தங் கி யி ரு ந் த போ து தா ன் த மி ழர் களில் நா ட் டா ர். என் ற. பி ரி வி ன ரு ம். உ ள் ள னர். எ ன் ப தை அ றி ந் தே ன். ஒரு. மு றை தே ர் த லி ல் நி ன் ற போ து கா ம ரா ச ரி ன் பெ யர் கா ம ராஜ நா டா ர் .எ ன் றே நா ளி தழ் களி ல். ப தி வு செ ய் தா ர் க ள். பி ன் ன ர் அவ ரு ம். நா டா ர் என் பதை த் த வி ர் த் தா ர். நீ ங் கள்சொ ல் வ து எ ன க் கு ப். பு ரி. தகி றது. எ னி னு ம். நா ட் டா ர். எ ன் ற பி ரி.வி.ன.ர் இ ரு க் கி றா ர் கள். 11-Jan-2017 4:54 pm
நாவலர் ந .மு. வேங்கடசாமி நாட்டார் தாமே தமிழ் படித்து உயர்ந்த தமிழ் பேரறிஞர் . நாட்டாரை ஏன் சாமியாராக்கியிருக்கிறீர்கள் ? நாட்டார் என்பது சாதியைக் குறிக்கும் பெயரோ என்ற ஐயம் ஏற்பட்டிருக்கலாம். இல்லை . நாடு --நாட்டைச் சேர்ந்தவர் நாட்டார். நம் மாநிலம் தமிழ் நாடு . நாம் தமிழ் நாட்டார்கள். அன் விகுதி மாற்றி அர் அல்லது ஆர் விகுதி வர அமைப்பது தமிழில் மரியாதை பண்பாடு. அதனால்தான் சாமி சாமியாரானார் . கவிஞன் கவிஞரானார் , தமிழன் தமிழரானார். மலர் மலராரானார் . சாரலன் சாரலரரானார் ஆகலாம். நாவலர் தம் பெரும் புலமையால் சாதீய பெயர்களுக்கு சிறப்பு விளக்கம் தந்திருக்கிறார் . போற்றலாம். சரிதானே மலராரே ? அன்புடன், கவின் சாரலன் 11-Jan-2017 9:17 am

மேலே