எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 அடிமை அரசியல் 


ஆளும் கலை யாவரும் அறியார், அறியாத சிலரே ஆட்சியில் அமர்வார். 
வீழும் வரை நம்பலம் அறியார், அறியாத வரையில் நம்பியே இருப்பர், 
நாளும் விதை முளைப்பதை அறியார், முளைத்திட முற்படும் நேரம் முட்டுக்கட்டை இடுவர். 
வீரம் நம்மில் கொலைசெய்திட அடக்கியே வைப்பார், கோலை கொலையுண்டு சாகும் நேரம் வீரனாய் எழுவார். 
மாறனும், மங்கையும் மறைந்திட முயல்வர், முன் நின்று வழிநடத்த வீரனாய் எழுவர். 
காரணம் தேடியே தப்பிக்க முயல்வர் , தவறு இதுவென்று கண்டால் மரணம் காணவே மல்யுத்தம் செய்வார்.   

மேலும்

பாட்டி சொல்......

மூக்கில பஞ்சி வச்சி
மொகத்தில
முழு ரூவா ஒட்டுமுன்ன
நாக்கு ருசியாப் பேசு,
நல்லதயே செய்யிப்பா..

அந்தப்
பாட்டி சொன்னதுதான்..

ஆனால்,
பாவம்
முழு ரூவா ஒட்டக்கூட
ஆளில்லை அவளுக்கு...!

நன்றியுடன்,
-செண்பக ஜெகதீசன்...
http://www.muthukamalam.com/verse/p1888.html

மேலும்


மேலே