எண்ணம்
(Eluthu Ennam)
வைணவம்
தமிழில் மாலியம் எனப்படுகிறது...
வைணவம் என்பது நாராயணனை முழுமுதற் கடவுளாக வழிபடும் இந்து சமயத்தின் ஒரு பிரிவு...
இவர்களை ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றுக் குறிப்பிடுவர்...
இவர்களில் வடகலையார், தென்கலையார் என இரு பிரிவுகள் உண்டு...
இவர்களுக்கு சமசுகிருதமும், தமிழும் புனிதமான மொழிகள் ஆகும்...
நாராயணனை விஷ்ணு, திருமால்,சேஷசயனன் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருப்பெயர்களால் அழைப்பர்...
இந்தப் பெயர்கள் அனைத்தும் அடங்கிய நூலே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்...
இத் திருப்பெயர்களில் மகாபாரதத்தில் காணப்படும்வகையே புகழ்மிக்கது...ஸ்ரீவைஷ்ணவர்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஓதும் இந்த நூல் மிகப்புனிதமானது...
இது மகாபாரதத்தில் குருசேத்திரப் போரின்போது மரணப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் யுதிஷ்ட்டிரருக்கு உபதேசித்தது...
இந்துச் சமய மும்மூர்த்திகளுள் ஒருவரான நாராயணன் உலகை இரட்சிக்கும் கடவுளாகப் போற்றப்படுகிறார்...
இந்தச் சமயத்தினர் நெற்றியில் நாமம் (திருமண்) அணிவர்...
வடகலை மற்றும் தென்கலையாருக்கு தனித்தனி திருமண் காப்புகள் (நாமங்கள்) உண்டு...
இந்த மதத்தினர் தம் வாழ்நாட்களுக்குள் பூலோகத்தில் தரிசிக்கவேண்டிய வைணவத் திருக்கோயில்கள் (திவ்விய தேசங்கள்) 106...
மொத்த திவ்விய தேசங்களான 108 தலங்களில், திருப்பாற்கடலும், திருவைகுந்தமும் மேலுலகில், மண்ணுலகை விட்டபின்னர்தான் தரிசிக்கமுடியும்...
தமிழ் மொழிக்கு வைணவம் என்றும் பெயர் உண்டு.. பன்னிரு ஆழ்வார்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் என்னும் திராவிட வேதத்தை தமிழில் அளித்து அந்த நூலை வைணவர்கள் வேதங்களுக்கு இணையாகப் போற்றுவதால் தமிழுக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.