எண்ணம்
(Eluthu Ennam)
மனிதர்கள் தோற்றத்தில் அவ்வளவு நிறங்கள் என்றால், அவர்களின் உள்ளத்தில் , அடாடா,எத்தனை எத்தனை வண்ணங்கள்! . ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட வித்தியாசமான மனம். இந்த மனம் என்னும் மாயப் பொருள் எங்கே என்று கூட கண்டு பிடிக்க முடியாது. ஆனால் அந்த மனதால் ஒருவருக்கு முடியாதது ஒன்றும் இல்லை. அதே மனதால் பலருக்கு நன்மையாக முடிந்தது ஏதும் இல்லை. ஏனெனில் மனம் ஒரு நிலையான திடமான மலைப் பாறை அல்ல. தெளிவான நீர் ஓடை அல்ல. ஒரு குரங்கு போல் தான் அதன் சுபாவம். அது தற்போது என்ன நினைக்கிறது என்பது கூட நமக்கு தெரியாது, அதைக் கூர்ந்து கவனிக்காமல் இருந்தால். மனதை வென்றவர் வாழ்க்கையை வென்றவர் ஆவார். நமக்கு தெரிந்த வரையில் அல்லது தெரிவிக்கப்பட்ட வரையில் மனதை தன் அடிமையாக்கி அதனை ஆண்டு அதனால் உயரிய அன்பு அமைதி ஆனந்தம் கண்டவரை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நம்மில் பலரும் மனதிற்கு அடிமைகள் தான். சரி அடிமையாகவே இருந்து விட்டுப் போவோம். ஆனால் கொத்தடிமை போல வாழ வேண்டாமே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நம் மனசாட்சியை கவனித்து அது சொல்வதை மனது கேட்கும்படி செய்தாலே நம்முள் தூய அன்பு பரவி நமக்கு எவ்வளவோ உயர்ந்த அமைதியையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். ஆனால் இதற்கு மிகவும் இன்றியமையாதது , நமக்கு நன்கு தெரிந்த உண்மை தான், அதாவது நேர்மையான முயற்சி.
சில மின் பாதுகாப்பு குறிப்புகள்
* மின் ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும்.
* ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின் சாதனங்களை மட்டுமே, பயன் படுத்த வேண்டும்.
* மின் பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னும், எடுப்பதற்கு முன்னும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்
* ப்ரிட்ஜ் , கிரைண்டர் போன்றவற்றிற்கு நிலைஇணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ளமின், ’ப்ளக்’குகளை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
* ஈ.எல்.சி.பி.,யை வீடுகளில், மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தினால், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.
* உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்கக் கூடாது.
* ‘டிவி’ ஆண்டனாக்களை மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகே கட்டக் கூடாது. ‘டிவி’ ஆண்டனாவின் ஸ்டே ஒயரை மின் கம்பத்தில் கட்டக் கூடாது.
* ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான, ‘எர்த் பைப்’ போடுவதுடன், அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து, பராமரிக்க வேண்டும்.
* சுவிட்சுகள், ’பிளக்’குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
* ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வெண்டும்.
* மின் கம்பத்திற்காக போடப்பட்ட ஸ்டே ஒயரின் மீது அல்லது மின் கம்பத்தில் கயிறு கட்டி துணி காயவைக்கக் கூடாது.
* குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக் கூடாது. சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி., பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிக்கக் கூடாது.
* மின் இணைப்பிற்கு எக்ஸ்டென்ஷன் கார்டுகள் உபயோகிக்கும் போது, அவைகளில் பழுதுகள் இருக்கக் கூடாது.
* மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக் கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன் படுத்தக் கூடாது. அவற்றின் மீது விளம்பரபலகைகளை கட்டக் கூடாது.
* மழைக் காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்லக் கூடாது. அறுந்து விழுந்த மேல்நிலை மின் கம்பி அருகே செல்லக் கூடாது. எங்கேனும் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால், உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகே போதுமான இடைவெளி விட்டு கட்டடங்களை கட்ட வேண்டும்.
* டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது.
* உயர் மின் அழுத்த கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை வெட்ட, மின் வாரிய அலுவர்களை அணுக வேண்டும்.
* அவசர நேரங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் வகையில், மின் கருவிகளின் சுவிட்சுகள் இருக்க வேண்டும். உபயோகிக்காத நேரங்களில் சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும்.
* மின் தீ விபத்துகளுக்கு உரிய தீயணைப்பான்களை மட்டுமே அதற்கு பயன் படுத்த வேண்டும். தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை,உலர்ந்த ரசாயனப் பொடி, கார்பன் டை ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம்.
* மின்சாரத்தால் தீவிபத்து நேர்ந்திருந்தால், உடனே மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.
* எந்த மின் சர்க்யூட்டிலும் பளு ஏற்றக் கூடாது. ஸ்விட்ச் மற்றும் பியூஸ் போன்றவைகளை மாற்றும் போது, சரியான அதே அளவு திறன் கொண்டவைகளையே பொருத்த வேண்டும்.
* இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடங்கள், வீடுகள், பஸ்கள், கார், வேன் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும்.
* மேலும், குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். அருகில் உரிய இடம் இல்லை எனில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* இடி, மின்னலின் போது, ‘டிவி’, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசியை பயன் படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.