எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதர்கள் தோற்றத்தில் அவ்வளவு நிறங்கள் என்றால், அவர்களின் உள்ளத்தில்...

மனிதர்கள் தோற்றத்தில் அவ்வளவு நிறங்கள் என்றால், அவர்களின் உள்ளத்தில் , அடாடா,எத்தனை எத்தனை வண்ணங்கள்! . ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட வித்தியாசமான மனம். இந்த மனம் என்னும் மாயப் பொருள் எங்கே என்று கூட கண்டு பிடிக்க முடியாது. ஆனால் அந்த மனதால் ஒருவருக்கு முடியாதது ஒன்றும் இல்லை. அதே மனதால் பலருக்கு நன்மையாக முடிந்தது ஏதும் இல்லை. ஏனெனில் மனம் ஒரு நிலையான  திடமான மலைப் பாறை அல்ல. தெளிவான நீர் ஓடை அல்ல. ஒரு குரங்கு போல் தான் அதன் சுபாவம். அது தற்போது என்ன நினைக்கிறது என்பது கூட நமக்கு தெரியாது, அதைக் கூர்ந்து கவனிக்காமல் இருந்தால். மனதை வென்றவர் வாழ்க்கையை வென்றவர் ஆவார். நமக்கு தெரிந்த வரையில் அல்லது தெரிவிக்கப்பட்ட வரையில் மனதை தன் அடிமையாக்கி அதனை ஆண்டு அதனால் உயரிய அன்பு அமைதி ஆனந்தம் கண்டவரை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நம்மில் பலரும் மனதிற்கு அடிமைகள் தான். சரி அடிமையாகவே இருந்து விட்டுப் போவோம். ஆனால் கொத்தடிமை போல வாழ வேண்டாமே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நம்  மனசாட்சியை கவனித்து அது சொல்வதை மனது கேட்கும்படி செய்தாலே நம்முள் தூய அன்பு பரவி நமக்கு எவ்வளவோ உயர்ந்த அமைதியையும்  ஆனந்தத்தையும் கொடுக்கும். ஆனால் இதற்கு மிகவும் இன்றியமையாதது , நமக்கு நன்கு தெரிந்த உண்மை தான், அதாவது நேர்மையான முயற்சி.

வாங்க, நாமும் கொஞ்சம் இதை ஜாலியாக செய்து பார்க்கலாமே! 💐💐ஆனந்த ராம்  

பதிவு : Ramasubramanian
நாள் : 12-Dec-21, 11:31 am

மேலே