எண்ணம்
(Eluthu Ennam)
அன்பு என்பது ஒருவகை உயிர்கொல்லும் நோய்
அது ஒருவர் மீது வந்துவிட்டால் எளிதில் குணமடையாது
அதற்கு மருந்து காதல் என்னும் ஊசி
அதனை செலுத்திவிட்டால் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும்
அப்படி வாழவில்லை எனில் மரணத்தை தழுவ வேண்டும்
அன்புக்காக ஏங்கி காதலித்து அந்த காதலை புரியாமல்
ஆணவம்,கோவம் இவற்றால் இழந்து
கடைசியில் மரணவாசல் செல்ல தேவையா இந்த அன்பு !!!
அருமையான விளக்கம்...நன்றி 28-Nov-2018 6:20 am
முதலில் நல்ல புரிதல் வேண்டும். நாம் செலுத்தும் அன்பு காதலா நட்பா என்ற புரிதல்.
பிறகு அறிதல் வேண்டும். அன்பு வேறு காதல் வேறு. தேர்ந்துகொண்ட இணையை பற்றிய நிலையை அறிதல் வேண்டும் .
பிறகு காதலின் கரத்தில் அளித்திட வேண்டும். 'எண்ணித் துணிக கருமம் பிறகு எண்ணுவம் என்பது இழுக்கு' இது சான்றோர் வாக்கு இதன்படி நமது வாழ்வை அமைத்துக்கொண்டால் தோல்வி என்பதே இல்லை.
தொடர்ந்து வாழ்ந்திருக்க நமது அனுபவம் மற்றும் முடிவு கைகொடுக்கும்.
நன்றி நட்பே. அருமை நட்பே 27-Nov-2018 8:42 pm
தங்கள் எண்ணம் சரியே..
21-Nov-2018 5:24 pm
உங்கள் கருத்தை ஏற்கிறேன் ..ஆனால் சிலர் புரிந்துகொள்ளவில்லை காதல் அன்பை என்று நினைக்கிறன் 21-Nov-2018 4:41 pm