எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

---------------------------------------------------------எண்ணத்தில் ஓடம்------------------------------------------------------------------------
எண்ணத்தை ஓடவிட்டேன் சிந்தனை சிகரம் தொட்டேன் 
எண்ணத்தில் ஓடம்விட்டேன் காதலலையில் மிதந்தேன் 
கண்களின் அசைவினில் கவிதை ஒன்று சொன்னாள்
வண்ண மாலையில் அவளுடன் நடந்தேன் 

---அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கம்பன் துவக்கி வைத்த காதல் காட்சி 
பின்னாட்களில் காதல் கவிஞர்களுக்கு முன்னோடியாய் திகழ்ந்த கம்பனின் கலிவிருத்தப் பாடல்
வள்ளுவன் அதற்கும் முன்பே காதலின் மென்மையை தொட்டுக்க காட்டியிருக்கிறான்.
மலரினும் மெல்லியது காமம் (காதல் என்று கொள்க )

பாவேந்தர் காதலை ஒரு கவிதையில்    அற்புதமாக சொல்லியிருப்பார் 

கூடத்திலே மனப்படத்திலே விழிகூடிக்கிடந்த   ஆணழகை 
ஓடைக்குளிர் மலர்ப் பார்வையினாள் உன்னத் தலைப்படும் நேரத்திலே 
பாடம் படித்து நிமிர்ந்த விழிதன்னில் பட்டுத் தெறித்தது மானின்விழி 
ஆடைதிருத்தி நின்றாள் இவனாயிரம் ஏடு திருப்புகின்றான் 

---இக்கவிதையில்   கம்பன் தோற்றான் என்று சொல்வதா கம்பனை கவிஞன்   வென்றான் என்று  சொல்வதா?
இல்லை கம்பன் வழி நடந்தான் பாரதி தாசன்   என்று சொல்வதே சாலப் பொருந்தும் 
தான் வாழும் காலத்திற்கேற்ப  கற்பனையில் ஒரு காதல் காட்சியை கண்முன் கொண்டு 
நிறுத்துகிறான் கவிஞன் .மேலும் தொடரலாம் 

   விழிகூடிக் கிடந்த அழகை ...ஓடைக்குளிர்  மலர்ப் பார்வையினாள் ---நான் ரசித்த சொல்லாடல்கள் 
ஆடைதிருத்தி நின்றாள் ---அப்படி என்றால் ? 
ஆயிரம் ஏடு திரும்புகிறான் ----காட்சியின் இலக்கிய அழகை ரசித்தோர் எழுதலாம் 
       

மேலும்

தங்கள் அன்பிற்கும் மதிப்புக்கும் மிக்க நன்றி 20-Oct-2021 4:27 pm
கருத்துக்கு மிக்க நன்றி கவின் சாரலரே வணக்கம் 19-Oct-2021 5:35 pm
நானல்லவா உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் வருகையிலும் கருத்துப் பதிவிலும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவி இலக்கியப் பிரிய பழனிகுமார் இரண்டு பழனியர் கருத்தினில் நெஞ்சில் ஐங்கனி கூட்டு அமுதத் தித்திப்பு 19-Oct-2021 5:24 pm
கவிதையுடன் கருத்து மிக்க மகிழ்ச்சி அங்கம் மின்னக் கண்டவன் திகைப்பில் ஆயிரம் என்ன கோடி பக்கம் புரவி வேகத் திலவன் புரட்டுவன் ----ஆஹா அருமையான விளக்கம் மிக்க நன்றி கவி இலக்கியப்பிரிய பழனி ராஜரே 19-Oct-2021 5:17 pm

மேலே