பெண்ணொருத்தி

அத்தனைபேர்கூடி
ரயிலுக்குக் காத்திருக்கையில்
என்னிடம் மட்டும் பிரியம் வைத்து
ஒரு காக்கை
தலை தட்டிச் சென்றதும்
கேன்டீனில் கொஞ்சம் தண்ணீர் வாங்கி
சனி கழிய
தலையில் தெளித்துப்போவென
பரிவாகச் சொன்னாள் பெண்ணொருத்தி...


கவிஞர் : யூமா. வாசுகி(14-Jun-12, 2:52 pm)
பார்வை : 37


மேலே