கரப்பு

நற்காலை புலர்த்தி நல்லிரவு உறக்கிய‌
குறுஞ்செய்தி ஊற்றில் குருத்தது
குரலன்றித் தடயம் மற்றொன்றில்லை
முகம் என்பதோர் அனுமானம்
கனசெவ்வகத் தொட்டியைக்
கடலென நம்பும் வண்ணத்து மீனினம்
விபத்தோ விருப்போ சிம் தகடு தொலையக்
கலையும் மயக்கம்


கூற்றுவன் எய்திய கூற்று அவண் எய்த
காலம் கடந்து போம்
கன்னம் நனைந்து இருதுளி வீழும்
அன்றேல்
உதட்டுச் சுழிப்பில் உய்தலும் நேரும்
கசிந்து நெகிழ்ந்து காமுற்று உரைத்தவை
ககன வெளிதனில்
கரந்து கிடக்கும்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:14 pm)
பார்வை : 0


மேலே