ஓ விநாயகா!

ஓ விநாயகா!
உன்
இன்னொரு தந்தத்தையும்
இரண்டாய் உடைத்து
இந்தியர் எல்லாக்கும்
எழுத்தறிவித்தால்....
ஓம் முருகா !
சூரனை எறிந்த உன்
சுத்தவேல்
ஊழல் பூதத்தின்
உயிர்தடவி முடித்தால்...
அம்மா ஆண்டாள் !
முப்பத்தைந்து வயது
முதிர்கன்னியர்க்கெல்லாம்
நீ மாப்பிள்ளை அடைந்த
மகத்துவம் சொன்னால்...


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:27 pm)
பார்வை : 0


மேலே