வழிக்கு வா - இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்

பெண்மையில் இருந்து கொண்டு

ஆண்மையைப் பயன்படுத்துங்கள்;

இதுவே, இவ்வுலகின் நுழைவாயிலாய் இருக்கின்றது.

நீங்கள் இசைவைத் தழுவி

பிறந்த குழந்தை போலாகிவிடுங்கள்;

பலமின்மையில் இருந்து கொண்டு

பலத்தைப் பயன்படுத்துங்கள்;

இதுவே, இவ்வுலகின் வேராய் இருக்கின்றது.

நீங்கள் இசைவுக்குள் மொத்தமாய் மூழ்கி

செதுக்காத மரத்துண்டு

போல் ஆகுங்கள்;

இருளாய் இருந்து கொண்டு

ஒளியைப் பயன்படுத்துங்கள்.

இதுவே, இவ்வுலகமாய் இருக்கின்றது.

நீங்கள் நேர்த்தியான இணக்கமாகி

வழிக்குத் திரும்புங்கள்.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:15 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே