மெசியாவின் காயங்கள் - விளம்பரம்

யாரொருத்தியும் வாய்க்காமல்
சுய முடிவெடுத்து
செத்தும் தொலையாமல்
நம்பிக்கையோடு இன்னும்
பெண் தேடிக்கொண்டுதான்
இருக்கிறது அது என்பதே
இத்தரப்பிலிருந்து
எல்லோருக்குமான தலைப்புச் செய்தி.
இதே நாளில்
பிரிந்து போனதற்காக
நாளிதழில்
குடும்பத்தோடு வருந்துபவர்கள்
தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்
இளம் பெண்களின் புகைப்படங்களை.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 8:56 am)
பார்வை : 95


பிரபல கவிஞர்கள்

மேலே