தமிழ் கவிஞர்கள்
>>
தபு ஷங்கர்
>>
தெய்வமே என்னைக் கைவிட்டு விடாதே!
தெய்வமே என்னைக் கைவிட்டு விடாதே!
தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!
உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?