புன்னகை

புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன்
புன்னகை


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:06 pm)
பார்வை : 159


மேலே