ஆற்றுநடை

நோய் தீர்ந்தார், வறுமை தீர்ந்தார்,
நூற்றுக்கு நூறு பேரும்!
ஓய்வின்றிக் கலப்பை தூக்கி
உழவுப்பண் பாடலானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய் நடக்கின்றாள், வையம்
தழைகவே தழைக்க வென்றே!


கவிஞர் : பாரதிதாசன்(14-Jan-11, 1:40 pm)
பார்வை : 445


பிரபல கவிஞர்கள்

மேலே