ஆகாயத்துக்கு அடுத்த வீடு

இடிந்து கிடக்கின்றன மசூதிகள்...
இடிபாடுகளின் உள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறான்
இறைவன்...
எரிந்து கிடக்கின்றன தேவாலயங்கள்
சாம்பல் குவியலில்
மெல்ல அசைகிறது
கர்த்தரின் தலை
காயம்பட்டுக் கிடக்கின்றன கோவில்கள்
காதுகளைப் பொத்தியபடி
கடவுள்
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கும்
கூட்டத்தை நோக்கி
மூவரும் நோக்கி
ஒரு கேள்வி
உங்களில் யாராவது
ஒரு மனிதன் இருந்தால்
வரச் சொல்லுங்கள்
ஒன்றாக நாங்கள்
உயிர்த்தெழுகிறோம்


கவிஞர் : மு. மேத்தா(2-Nov-11, 2:19 pm)
பார்வை : 169


மேலே