கேள்வியின் நாயகனே

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்

பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் - கன்று
பாலருந்தும் போதா காளை வரும்?
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம்
சிந்திந்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலொரு தாலி உண்டா?
வேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தர்ம தரிசனத்தை தேடுகிறான்
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?

ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததின்று கோவில் கண்ணே
நமது வேதம் தனை மணந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன?
உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி...
மனம் எப்படி?
நீ விரும்பும்படி...

பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா...திருமுருகா...


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 3:47 pm)
பார்வை : 189


பிரபல கவிஞர்கள்

மேலே