தெளிவு

எல்லா மகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோ டா?-மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின்
புத்தி மயக்க முண்டோ ?

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவதுண்டோ -மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண் டோ டா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனெமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவனுரைத் தனனே;-மனமே!
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்ச வரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்
கச்சமு முண்டோ டா?-மனமே!
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவ மடா!


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 12:42 pm)
பார்வை : 15


பிரபல கவிஞர்கள்

மேலே