தை மகளே வருக (பொங்கல் கவிதைப் போட்டி)
கவலைகள் பஞ்சாய் பறந்து
புன்னகையோடு பொழுதுகள் மலருமா என்று
காத்திருக்கும் உள்ளங்கள் எத்தனை எத்தனை !!!!
ஆதவனுக்கு நன்றி நவில்ந்து
ஆசையோடு பொங்கல் பொங்கி அருந்த
ஆவலாய் தான் இருந்தோம் நாம் அன்று …..
மனதிற்குள் புதைந்திருக்கும் ஞாபகச் சின்னங்களை
சிக்கெடுத்துப் பார்த்தேன்
வேதனையின் விளிம்பில்
வெற்றிடமாக காட்சியளிக்கிறது
கடந்தகால பொங்கல் திருநாள்…..
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று
கசப்பான விடயங்களைக் களைந்து,
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோர்க்கு ஒப்பானவர்களை
பண்செய்த தமிழாள் வாழ்த்துரைத்து
சாதி மதம் பாராது தமிழ் பண்பாட்டை போற்றும்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை
மகிழ்வோடு கொண்டாடுவோம் நம் இல்லங்களில்
தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற கூற்று மெய்ப்பட
தை மகளே வருக!! விடியலைத் தருக !!!
அனைவர் வாழ்விலும் ஒளியேற்றுக!!
பாரதி

