வாழ்கவே....!!

தொடர் தோல்விகளோடு
நான் தொலைந்து போனதருணமதில்
தோள்கொடுத்து தூக்கி நிறுத்திய தோழியே..!!

சராசரி மானிடனாய் நான்
சஞ்சலப் பட்டபோது
உச்சி மண்டையில்
நச்சென்று கொட்டி
எமக்கான நட்பை அடிக்கடி
உறுதி செய்தவள் நீயடி...!

நீ பிரியவில்லை
நானாய் விலகிவிட்டேன்,
பிரிவின்வலிகள் எனக்கு பழக்கமடி
புதிதாய் ஒருவலி உனக்கு வேண்டாமே..!

மன்னிப்பு என்று ஒன்று
கேக்கப்படவுமில்லை,
கொடுக்கப்படவுமில்லை...!

இருப்பினும் வெற்றிடங்கள் என்று
நம்மிடம் எதுவுமே இல்லை...!

கருங்கொடி ஊரில்
மகுடங்கள் சூடி - நாளை நீ
பல்லாக்கில் செல்லப் போவதாய்,
உன் உறவில் நின்றும்
உறவாகா ஒருத்தன்
முனுமுனுத்துவிட்டான் என்னிடம்..

மனசெல்லாம் பூரித்து பூப்படைந்து
கண்களில் தெறித்தது ஆனந்தக்கண்ணீரடி....!!

வாழ்கவே,
வாழ்கவே - நீ
பல்லாண்டுகாலம்
பதினாறோடு ஒன்று அதிகம் பெற்று
வாழ்கவே....!!

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (8-Jan-13, 1:19 pm)
பார்வை : 241

மேலே