உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் கவிதைப்போட்டி)
இயற்கையோடு இயைந்த விவசாயத்த
செயற்கையா மாத்திட்டோம்
பண்ணாட்டு நிறுவனங்களிடம்
விவசாயி உயிர பலிகடா ஆக்கிட்டோம்
விதவிதமா இராசயன உயிர்கொல்லிகள
இறக்குமதி செய்திட்டோம்
செழிப்பான நம் நஞ்ச புஞ்ஞைக்கு
விஷ ஊசி செலுத்திட்டோம்
தண்ணீர் தர மறுக்குது பக்கத்து மாநிலம்
‘பேசிப்பாக்கலாம்னு’ பொறுமை காக்கச்சொல்லுது
பொய் கூட்டாட்சி தத்துவம்
வக்கத்த விவசாயிக்கு
பொறுமை காக்கத்தெரியும்
வளர்ந்துவரும் நாற்றுக்கு
கறுகாம இருக்கத்தெரியுமா
மண்ணெல்லாம் மலடாச்சி
விவசாயி மனசெல்லாம் ரணமாச்சி
வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட முடியாம
குடும்பம் குடும்பமா பிணமாச்சி
இப்படியே போன
மனிதகறியும் மக்காத பிளாஸ்டிக்கும்தான்
உணவாக மிஞ்சும்
அதையும் தின்னச்சொல்லி
சின்னத்திரை விளம்பரத்தில்
நடிகைகள் கொஞ்சும்
… …