எத்தனை காலம் தாங்க

காலை எழுந்து கண் விழித்து
வாழ்ந்த கனவோடு
காத்திருக்கும் ஒரு இதயம்
எடுத்து வைத்த களம் எங்கும்
தெரியவில்லை-கைகோர்த்து
சென்ற இடம் எல்லாம்
கல்லறையாக தெரியும் காலம்
தந்து சென்ற இரவுகள்
கவிதை எழுதி கரைத்து சென்ற
காகிதம் கூட இன்று கலங்கி நிற்கும்...
தெரிந்திருந்தும் தெரியாத இரவுகள்
பயத்தில் உறைந்து பதறிய காலத்தில்
பரிதவிக்கும் நெஞ்சம் ......................
கண்ணீரால் கரைந்து கலங்கி நின்ற
இதயத்திற்கு எப்படி தெரியும் ......
இனி எத்தனை காலம் தாங்க என்று ...
உணர்ந்துகொள்ள முடியாத உறவுடன்
உறைந்து கிடக்கும் உண்மைகள்..........

எழுதியவர் : கஸ்தூரி (8-Jan-13, 7:29 pm)
சேர்த்தது : மகாகஸ்தூரி
பார்வை : 129

மேலே