காதலின் கல்லறை

உன்னையே நினைத்து உயிர் வாழும்
உன் இதயம் .

மின்மினி பூச்சிகளின் சிறகாய்
சிறகடித்து பறந்தாய்
இவ்வுலகை விட்டு

என் கண்களை சேரும் முன்னரே
கல்லறை சேர்ந்தாய் ஏனோ ?

என் உயிரை எடுத்து சென்றாய்
உன் நினைவுகளை விட்டுவிட்டு .

கடலை பார்க்க நின்ற என்னை
கடலுக்குள் இழுத்து சென்றாய் .

கரும்பாய் இருந்த நம் காதல்
கல்லறை சேர்ந்ததே
கருணை வடிவில் .

உன் ஒரு பார்வையில்
திகைத்து நின்றேன்
ஒரு நொடி .
உன்னை பிரிய மனமில்லாமல்
உன்னை வந்து சேர்கிறேன் பாரடி ................

எழுதியவர் : venkatesh k m (8-Jan-13, 7:52 pm)
Tanglish : kathalin kallarai
பார்வை : 80

மேலே