மனித மிருக செயல்

டெல்லி மருத்துவ மாணவி மீதான பாலியல் கொடுமைக்கு இணையாக புதுச்சேரியிலும் பள்ளி மாணவி மீது பாலியல் வக்கிரம்!

புதுச்சேரி மாநிலம் கொத்தபுரி நத்தம் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி நாகராஜ் என்பவரின் மகள் திவ்யா (17வயது) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுச்சேரி அரசு மகளிர் மேநிலைப்பள்ளியில் +2 படித்து வருகிறார். கடந்த 1-1-13 அன்று மாலை டியூசன் சென்ற அவரை, ஏற்கெனவே நட்பு ரீதியாக பழகி வந்த முத்து என்பவன் திவ்யாவிடம் “உனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை” எனவும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் பொய் சொல்லி கடத்திச் சென்றுள்ளான். தனது கூட்டாளி பொறியியல் கல்லூரி மாணவனான வெங்கடாஜலபதியையும் தொலைபேசி மூலமாக அழைத்து இருவரும் கூட்டாக விழுப்புரம் பேரூந்து நிலையத்தில் அந்த மாணவியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியில் மயக்கமடைந்த மாணவியை இறந்து போய் விட்டாள் என நினைத்து இரு காமவெறியர்களும் ஓடிவிட்டனர். பிறகு மயக்கம் தெளிந்த அந்த மாணவி தொலைபேசி மூலம் தனது பெற்றோர்களுக்கு விவரத்தை கூறி இருக்கிறாள். பின்னர் பெற்றோர்கள் காவல் துறையின் துணையுடன் மகளை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இரு காமவெறியர்களின் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது.

இதைக் கேள்விபட்ட புஜதொமு தோழர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே புகுந்து பலத்த பாதுகாப்புடன் வந்த காமவெறியர்கள் இருவரையும் தூக்கில் போடு என்று முழக்கமிட்டனர். கோர்ட் வளாகத்திற்கு உள்ளேயே புகுந்து முழக்கமிட்டதால் பீதியடைந்த காவல்துறையினர் தோழர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தினையொட்டி புதுவை பகுதி முழுவதும் பேரூந்துகளில் சுவரொட்டி ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (8-Jan-13, 10:11 pm)
சேர்த்தது : tamilnadu108
பார்வை : 194

மேலே