களம்...!

ஒரு மண்ணில் நான் பிறந்தேன்...சில மக்களுடன் நான் வளர்ந்தேன்...ஏதேதோ புசிக்கக் கொடுத்தார்கள்....எதை எதையோ உடுக்கக் கொடுத்தார்கள்....! சிரிக்கவும் அழவும் முறையற்றுப் போயிருந்த புத்தியில் எங்கே சிரிக்க வேண்டும் எப்போது சிரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்கள்....

ஒரு இடத்தில் ஒரு உடலை கிடத்தி சுற்றியிருந்து எல்லோரும் அழுவதை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது...சப்தமாய் சிரித்தேன்....ஏன் இப்படி என்று...? யாரோ என்னை தனியே அழைத்துக் கொண்டுபோய்...இதன் பெயர் இறப்பு என்று போதித்தார்கள். எனக்கு சிரிப்பு வருகிறது என்று கனைத்து சிரித்து எள்ளி நகையாடிய கணத்தில் என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள்...காலம் கற்றுக் கொடுக்கும் என்று.....

ஏதோ ஒரு நாளில் நான் நேசித்த ஒருவன் உடல் செயலற்று கிடந்தது பார்த்து நான் அசைத்து, அசைத்து முயன்று முயன்று அவன் எழவில்லை என்று அறிந்து சோர்ந்து போய் நின்ற கணத்தில் அவன் எழமாட்டான் என்று யாரோ சொல்லிய போது திமிராய் ஏன்? என்று அவரைப் பார்த்து முறைத்த போது அவர் மெலிதாய் சிரித்து நகர்ந்ததின் காரணம் அறியவில்லை நான்....

ஆனால் என் நேசத்துகுரியவன் இன்னும் எழவில்லை.... ஆனால் எனக்குள் அவன் மீண்டும் நடக்கவேண்டும் என்னோடு பேசவேண்டும், சிரிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது....ஆனால் அது நிகழாது என்று உணர்ந்தபின் என்னுள் ஒரு கலக்கமும் இறுக்கமும் ஏற்பட...ஏதோ வித்தைகளை மூளை பரப்பி கட்டளைகளை பிறப்பிக்க...

என் கண்கள் பனிக்கத்தொடங்கின....என் உணர்வினை வெளிக்காட்ட நான் சப்தமிட்டு கத்தத் தொடங்கினேன்.....சுற்றி நின்ற கூட்டம் அதை அழுகை என்றது....!!!!!!

அன்று யாரோ ஒருவர் அழுத போது அவரின் பிரிய உறவுகள் இதைத்தான் செய்தன என்று ....என்னிடம் கூட்டம் கூறியது....! .மரணமென்றால் என்னவென்று அறியவும்...மரணம் யாருக்கேனும் சம்பவித்தால் எப்படி நடந்து கொள்ளவேண்டும்மென்றும் எனக்கு இப்போது சொல்லிக் கொடுத்தார்கள்.

நான் கேட்டுக் கொண்டேன். ஒரு உயிர் ஜனித்து நம்மிடம் இருந்து மறைந்து போகும் போது அதை அப்படியே கொண்டு போய் புதைத்தோ, அல்லது எரித்தோ விடுவதில் நமக்குள் ஒரு சமநிலை வாரது...அதனால் நமது அன்பின் வெளிப்பாடாய் அழுது தீர்க்கும் பொழுதில் நமது சுமைகள் மனம் விட்டு விலகும் என்றும் பயிற்றுவித்தார்கள்.

வாழ்ந்து மறைந்த மனிதனை நினைவு கூறல் என்ற சில சடங்குகள் ஏற்படுத்தி அதை மையப்படுத்தி நினைவு கூறலை ஒரு நன்றிக்கடன் ஆக்கினார்கள். நாளடைவில் மரணமும், அதன் பின் சடங்குகளும் பெரிதளவில் பின்பற்றப்பட்டன. .இப்படிப்பட்ட செயல்களை செய்யவும் சீராய் ஒரு கட்டுக்குள் இருக்கவும் மனித ஆழ்மனமே (கவனிக்க!!!!!!!) கட்டளைகள் பிறப்பித்தது......

யாம் ஜனித்த மண்ணில் இருந்து எமக்கான வரைவுகளை யாமே தீர்மானித்தோம். தண்ணீரை மிருகம் போல யாம் தலை குனிந்து நாவால் பருகி வந்தோம்....அங்கே முதன் முதலில் ஒருவன் கையால் அள்ளிப்பருகும் செயலை கடினப்பட்டு செய்து...அதில் அதிக நீர் குடித்து....அதை எமக்கும் பயிற்றுவித்தான்....

அதை பயிற்றுவிப்பதில் பயில்வதில் ஒரு சுகம் இருந்தது பலன் இருந்தது. இப்படி பயிற்றுவிக்கப்பட்ட எதிலெல்லாம் சுகம் இருந்ததோ எதில் எல்லாம் பலன் இருந்ததோ அதை யாம் திரும்ப திரும்ப செய்தோம். அது எமது வழமையாகிப் போக எமது சந்ததிகளும் அதனை பின்பற்றத் தொடங்கினார்.

யாம் எல்லாம் கற்றுத் தேறி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சில அத்து மீறல்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. தண்ணீரை கைகளால் அள்ளிப் பழகவும் பருகவும் பழக்கிக் கொடுத்த சமுதாயத்தில் அதை ஒரு கட்டளையாக பிறப்பித்து பிறர் கொண்டு நீர் இறைத்து தனக்கு தருவிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கலவரங்கள் செய்தது. அப்படி கலவரம் செய்த கூட்டத்தில் உடல் வலிவும் உடலில் அதிக உணவுப் பொருட்கள் கூடி அதீத கொழுப்பும் கூடிப் போயிருந்தது.

இப்போது கையால் நீர்பருக பழகிக் கொடுத்தவனை .....விமர்சிக்க ஒரு கூட்டம் உருவானது. எமது இஷ்டம் போல் நாம் நீர் பருகுவோம்...நீ பயிற்றுவித்ததால்... ஒரு கூட்டம் அதை துஷ்பிரோயோகம் செய்தது....உமது கற்பிப்பும், கட்டுப்பாடும் எமக்கு வேண்டாம் என்று கொக்கரித்தது.

அப்படி கொக்கரித்த கூட்டம் கூறுவதில் அர்த்தஙகள் இருப்பது போல தோன்றி சிலர் கையால் நீர் பருக மாட்டோம்….எமது வசதிப்படி செய்வோம் என்றும் கையால் நீர் பருகும் ஒரு செயல் முறையை விமர்சிக்கத் தொடங்கினர்..............

ஆனால் கையால் நீர் பருகி பழகி அதன் பயன்பாடு அறிந்த கூட்டம்...சப்தமில்லாமல் இவர்களை கட்டுப்படுத்தி செயல் செய்யவைத்து பயன் பெற வைக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது........அதற்காகவே...சில யுத்திகளைப் பின்ன ஆரம்பித்தது....அந்த யுத்தியின் பின்னால் கூட்டு வாழ்வில் சீரான ஒரு சுமுகமான நிலை வேண்டும் என்ற பேரவா மிகுந்திருந்தது..............

மரணம் என்றால் என்ன என்று எம் சமுதாயத்திற்கு போதிக்கப்பட்டதும்.....அதன் பின் முதன் முதலில் எமக்கு நீர் பருக பயிற்றூவிக்கப்பட்டதும் போல காலம் மாற மாற எம்மை சீரான ஒரு மக்கள் கூட்டமாக இருக்க வைக்க கட்டுப்பாடுகள் மேல், கீழ், இடம் வலம்.........என்று கூட்டி , குறைத்து........விரிவடைந்து கொண்டிருந்தது போல....அதை துஷ்பிரோயோகம் செய்ய ஒரு கூட்டமும் அந்த துஷ்பிரோயோகத்தால் பாதிக்கப்பட்ட கூட்டம் தன் விருப்பப்படி வாழ்வேன் என்று கோஷமிடலும்...........தொடந்து கொண்டுதான் இருந்தது..........

இதுதான் நமது களம்......!!!!!!!

எழுதியவர் : Dheva.S (9-Jan-13, 11:06 am)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 147

மேலே