தை மகளே வருக... (பொங்கல் கவிதை போட்டி )

தை மகளே,
தரணி எங்கும்-உழவனின்
தரித்திரம் விலக
தலைப்பாகையுடன்,
தலை நிமிர்ந்து வருக....!!!

பத்தாவது மாதமே,
பற்றாக்குறையை, எதிர்க்கொண்டு
பகுத்தறிவோடு,பாங்கோடு
பல நல் வழிகள் கொண்டு
பயிரை உயிர்விக்கும்
பாமரர்க்கு தருக... !!!

திங்கள் முகம் பார்த்து
திட்டம் வகுக்காது
தினம், உழைத்து -வாழ்வின்
திசை அறியாமல்
திணறும்- வறியோர்க்கு
தித்திக்கும் தீப ஒளியாய் வருக...!!!

புலராத காலையில்
புள்ளிவைத்து கோலமிட்டு
புத்தாடை கட்டி,புதுமஞ்சள் கிழங்கு சூட்டி
புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு
புன்னகையோடு அழைக்கிறோம்
புத்தாண்டின் புதல்வியே வருக வருக....
புது வசந்தம் தருக.... !!!!!!!!!

-PRIYA

எழுதியவர் : PRIYA (9-Jan-13, 1:14 am)
பார்வை : 267

மேலே